வணக்கம் நண்பர்களே,

ஏற்ற தாழ்வுகள் இல்லாத, அனைவருக்கும் எல்லாமும் கிடைக்க பெற்ற, சீரான வாய்ப்புகள் அமைய பெற்ற, மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழும் சூழலமைந்த ஒரு சமுதாயம் தான் நம் அனைவரின் கனவு. இப்படி ஒரு சமுதாயம் உருவாக நமது எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்களில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதை வெளிச்சமிடுவது தான் இந்த இணையத்தின் நோக்கம்.

இதன் பதிவுகள் நமது பாரத தேசத்தை பற்றியே பெரும்பாலும் இருக்கவிருபதினால் இதை “யுடோபியன் பாரத்” – கனவு பாரதம் என்று பெயரிட்டுள்ளோம்.

நம்மவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றதாழ்வுகள் நம்மால் வேரறுக்கப்பட வேண்டும். எங்கள் பதிவுகள் நம் மனதில் நாமறியாமல் ஏதோ ஒரு ஓரத்தில் அயர்ந்து சோர்ந்துறங்கி கொண்டிருக்கும் எண்ணங்களின் எதிர்பார்புகளின் சங்கமம்.

ஒவ்வொரு பதிவின் முடிவிலும், அந்த பதிவை பற்றிய ஒரு சில கருத்து கணிப்புகளை அமைத்துள்ளோம். இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள், நாம் விரும்பும் கனவு பாரதம் உருவாக ஒரு தூண்டுதலாகவும், புள்ளி விவர ஆயுதமாகவும் அமையும் என நம்புகிறோம்.

பதிவுகளை படித்துவிட்டு கருத்து கணிப்பில் பங்கு பெற மறந்துவிடாதீர்கள். இந்த பதிவுகள் கனவு பாரதத்தை உருவாக்க பயன் பெரும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்களையும் கருத்து கணிப்பில் பங்கு பெற அழைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

.

“மாற்றங்களை கொண்டுவர நிகழ்கால உண்மைகளோடு சண்டையிட்டு பயனில்லை.
புதிய செயல்பாடுகளை உருவாக்கி, மாற்ற நினைத்தவைகளை வழக்கற்று போக செய்யுங்கள்.”
Buckminster Fuller / an American Architect, Systems Theorist, Author, Designer, and Inventor.